ஐக்கிய நாடுகள் சபை பூமியின் சாதனையாளர் என்னும் “​Champions of the Earth” விருதை எனக்களித்து கெளரவித்தது. இந்த விருதை மிகவும் பணிவன்புடன் நான் பெற்று கொண்டேன். இது ஒரு தனி​  ​நபருக்கான விருதல்ல என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். எப்போதும் இயற்கை அன்னையின் மடியிலும், நல்லிணக்கத்திலும் வாழ்தலை வலியுறுத்தும் நம் இந்திய கலாச்சாரம் மற்றும் மதிப்புகளுக்கான அங்கீகாரமாகவே இதை காண்கிறேன்.மாறிவரும் கால​ ​நிலையை தணிப்பதற்காக இந்தியா செய்துள்ள உயிர்ப்புமிக்க பங்களிப்பை ஐ​.​நா​-​வின் பொது செயலாளரான ஆண்டொனியோ கியுட்டர்ஸ் மற்றும்​ ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்திற்கான (​UNEP) நிர்வாக இயக்குனரான எரிக் சொல்ஹெயிம்​​ ஆகியோரும் ஏற்று ​​கொண்டு, அங்கீகரித்தது, இந்தியர் அனைவருக்கும் பெருமை மிகு தருணம்.
மனிதர்களுக்கும் இயற்கைக்கும் எப்போதும் தனித்துவமிக்க ஓர் உறவுண்டு. இயற்கை அன்னை நம்மை போற்றி பாதுகாத்து, வளர்த்து வருகிறாள். நாகரீகம் ஆதி நதிக்கரைகளில் உருவானதே! இயற்கையுடன் இணங்கி வாழ்ந்த சமூகங்கள் வளத்துடன் செழிப்புடன் திகழ்ந்தன.

இன்றைய மனித சமூகம் முக்கியமான ஓர் புள்ளியில் நின்றிருக்கிறது. இன்று நாம் தேர்வு செய்யும் பாதை நம் நலனை தீர்மானிப்பது மட்டுமன்றி நமக்கடுத்து இக்கிரகத்தில் வசிக்கவிருக்கும் நம் தலைமுறையின் நலனையும் சேர்த்தே தீர்மானிக்கும். நம்முடைய பேராசைக்கும் தேவைக்கும் இடையேயான சமநிலையற்ற இடைவெளி பயங்கரமான சுற்றுச்சூழல் ஏற்றதாழ்வுக்கு வழி வகுக்கும். இதை ஏற்றுகொண்டு நாம் உண்டு நம் வேலை உண்டென​​​ எப்போதும் போல சென்று விடலாம் அல்லது நின்று நிதானித்து தக்க நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

ஓர் சமூகமாக நம்மால் எப்படி நேர்மறையான மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கான மூன்று முக்கிய விஷயங்கள்

முதலாவது நமக்குள் தோன்ற வேண்டிய உள்ளுணர்வு. இதற்கு மகிமை ததும்பு கடந்த காலத்தை திரும்ப பார்ப்பதை தவிற வேறெந்த சிறந்த இடமும் இருந்துவிட முடியாது. இயற்கைக்கு நாம் அளிக்கும் மரியாதை இந்திய பாரம்பரியத்தின் அடிநாதமாக விளங்குகிறது. அதர்வன வேதத்திலிருக்கும் “ப்ரித்வி சுக்தா” என்கிற பகுதியில் இயற்கை குறித்தும் சுற்றுச்சுழல் குறித்தும் ஈடு இணையற்ற பதிவுகள் இருக்கின்றன. அதர்வன வேதத்தில் இவ்வாறு மிக அழகாக எழுதப்பட்டுள்ளது ​”​यस्यां समुद्र उत सिन्धुरापो यस्यामन्नं कृष्टयः संबभूवुः । यस्यामिदं जिन्वतिप्राणदेजत्सा नो भूमिः पूर्वपेये दधातु ॥३॥​” இதன் பொருள்: இயற்கை அன்னைக்கு நம் வணக்கங்கள். கடலும், நதியும் ஒன்றுடன் ஒன்று அவளுடன் நெய்யப்பட்டிருக்கிறது. உழுகிற போது வெளிப்படும் உணவும் அவளுள்ளே உள்ளது. அவளுள்ளே அனைத்து உயிர்களும் உயிர்ப்புடன் வாழ்கிறது. அந்த உயிர்ப்பை அவள் நமக்கு அளிக்கட்டும்.

பஞ்ச தத்துவங்கள் குறித்து எழுதியிருக்கும் நம் பழங்கால​ ​ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் – ப்ரித்வி(பூமி), வாயு(காற்று), ஜல்(நீர்), அக்னி(நெருப்பு), ஆகாஷ்(வானம்) – இவற்றோடு நம் வாழ்க்கை முறை எவ்வாறு இணங்கி செயல்படுகிறது என்பதை விளக்குகிறார்கள். இயற்கையின் அம்சங்கள் அனைத்துமே தெய்வீகத்தின் வெளிபாடே!!

மகாத்மா காந்தி அவர்கள் சுற்றுச்சூழல் குறித்து மிக விரிவாக எழுதினார்​;​ சுற்றுச்சூழல் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும் வகையில் வாழ்ந்தும் காட்டினார். நம்பிக்கையின் கோட்பாட்டை நயமிகு வழியில் எடுத்துரைத்தார். இது நமக்குள்ளும், நிகழ்கால தலைமுறையினருக்குள்ளும் பரிசுத்தமான கிரகத்தை உருவாக்க வேண்டுமென்ற மாபெரும் பொறுப்புணர்ச்சியை விதைத்துள்ளது. அவர் எப்போதுமே ஓர் நிலையான நுகர்வு முறை இருக்க வேண்டுமென விரும்பினார் எனவே இதன் மூலம் உலகம் வள பற்றாக்குறை சவாலை சந்திக்க வேண்டியதில்லை என்பது அவர் கருத்து.

இயற்கையுடன் இணைந்த நிலையான வாழ்வென்பது நம் பண்பாட்டின் ஒரு பகுதி. நம்மின் உயர்ந்த பாரம்பரியத்திற்கு நாம் எவ்வாறு கொடியுயர்த்தினோம் என்பதை உணர்ந்தாலே அது நம் செயல்பாடுகளில் நேர்மறை தாக்கத்தை தானாகவே ஏற்படுத்தும்.
இரண்டாவது அம்சம், பொது விழிப்புணர்வு. நாம் சுற்றுசூழல் குறித்து ஏராளமான​ ​முறை பேசி, எழுதி, விவாதித்து, கலந்துரையாடி எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு கேள்விகளை இது குறித்து நாம் எழுப்ப வேண்டும். அதே வேளையில்​,​ சுற்றுசூழல் சார்ந்த ஆய்வுகளையும், புதுமைகளையும் ஊக்குவிப்பதும் முக்கியம். இதன் மூலமாகத்தான், இச்சமகாலத்தில் நாம் எதிர்கொண்டிருக்கும் சவாலையும் அதை தணிப்பதற்கான வழி என்ன என்பதையும் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

ஓர் சமூகமாக நாம் எப்பொதும் நமக்கும் சுற்றுசூழலுக்கும் இடையேயிருக்கும் தொடர்பின் வலிமையை குறித்து உணர்கிறோமோ மற்றும் எப்போது அது தொடர்பாக தொடர்ந்து பேசுகிறோமோ அப்போது நிலையான சுற்று​ச்​சூழலை நிலைநாட்டத் தேவையான துடிப்புமிகு செயல்கள் தானாகவே நிகழும். இதனாலேயே நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த மூன்றாம் முக்கிய அம்சமாக நான் உயிர்ப்புமிக்க செயல்திறனை கருதுகிறேன்.

இதன் அடிப்படையில், இந்தியவின் 130 கோடி மக்கள் அனைவரும் உயர்ந்த செயல்திறனுடன் சுற்றுச்சூ​​ழலை பரிசுத்தமாகவும், பசுமையாகவும் வைக்க முன்னனியில் இருந்து இயங்குகிறார்கள் என்பதை மனமகிழ்ச்சியுடன் கூற ​​விளைகிறேன்.

இந்த சிறப்பான செயல்திறனை ​தூய்மை இந்தியா(​ஸ்வச் பாரத்)​​ திட்டத்தின் மூலம் நம்மால் கண்கூடாக காண முடிகிறது. இது நிலையான வருங்காலத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. இந்திய மக்களின் பெரும் ஆசிகளின் மூலமாக, முதன் முறையாக கிட்டதட்ட ​8 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. 4​0​ கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இனி திறந்த வெளியில் கழிவகற்ற தேவையில்லை. சுகாதாரத்தின் வளர்ச்சி 30 ​​சதவீதத்திலிருந்து 95 சதவீதமாக உயர்ந்துள்ளது. நம் சுற்றுச்சூ​​ழல் மீது வீழ்ந்துள்ள சுமையை குறைக்கும் தேடலில் நாம் மேற்கொண்ட முக்கிய முயற்சியிது.

இதே சிறப்பான செயல்திறனை உஜ்வால் யோஜ்னா திட்டத்தின் வெற்றி ​​மூலம் நாம் அறியமுடியும். சுகாதாரமற்ற முறையில் உணவு சமைக்கும் வழக்கத்தின் மூலமாக உருவாகும் உட்புற காற்று மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் சுவாச நோய்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைத்துள்ளது. இன்றைய தேதி வரையில் கிட்டதட்ட 5 கோடி உஜ்வாலா ​கேஸ்​ இணைப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்,​​ பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுத்தமான சுகாதாரமான வாழ்வு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா அதன் நதிகளை சுத்தம் செய்யும் பணியில் முழுவீச்சில் இயங்கி கொண்டிருக்கிறது. கங்கை. இந்தியாவின் உயிர்நதி. அதனுடைய பல பகுதி மாசடைந்துள்ள நிலையில்.. துவங்கப்பட்டிருக்கும் “​​நமாமி கங்கை”​​ திட்டம் இந்த மாசடைந்த வரலாற்றை ​மாற்றி அமைக்கும்​​​​ விதமாக செயல்பட்டு வருகிறது. கழிவு நீரை சரிவர கையாள்வதற்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.

நகர்புற வளர்ச்சி திட்டங்களான அம்ருத் மற்றும் ஸ்மார் சிட்டி திட்டங்களின் மூலம் நகர்புற வளர்ச்சி சுற்றுசூழல் மீதான அக்கறையுடன் மேம்படுத்தப்படுகிறது. 13 கோடிக்கும் அதிகமான மணல்​​ அட்டைகள்​​​ விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்களின்​​ உற்பத்தியை பெருக்கவும்,​​ தங்களின் நிலத்தின் நலத்தை கூட்டவும் தகுந்த முடிவுகளை எடுக்க உதவிகரமாக இருப்பதோடு இது வரவிருக்கும் வருங்கால தலைமுறைக்கும் உதவிகரமாக இருக்கும்.இந்தியாவின் திறன்களை சுற்றுச்சூ​​ழல் துறையில் ஒருங்கிணைத்து அதன் மூலம் “​​பசுமை திறன் வளர்ச்சி”​​ (Green Skill Development Programme) திட்டத்தை நிறுவி அதன் கீழ், வரும் 2021-​​ஆம் ஆண்டிற்குள் 7​0 லட்சம்​ இளைஞர்கள் சுற்றுசூழல், ​​காடு வளர்ப்பு, வனவியல் மற்றும் கால மாற்ற துறைகளுக்காக பயிற்றுவிக்கப்பட இருக்கின்றனர். இதன் மூலம்,​​ திறன் பெற்றவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் சுற்றுசூழல் துறையில் நீண்ட கால அடிப்படையில் உருவாகயிருக்கிறது.

புதுமையான மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்றல்களுக்கான வளங்களின் மீது இணையற்ற கவனத்தை செலுத்தி வருகிறது நம் நாடு. கடந்த நான்காண்டுகளில் இத்துறை எளிமையாக அணுகக்கூடியதாகவும், இயல்பான விலையில் பெறக்கூடியதாகவும் மாறியிருக்கிறது.
உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் கிட்டதட்ட 31 ​​கோடி ​LED பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ​LED பல்புகளின் விலை குறைந்துள்ளது.​​ அதை ​​போலவே,​​ மின் க​​​ட்டணமும், மாசும் இணைந்தே குறைந்துள்ளது.

இந்தியாவின் சிறப்புமிக்க செயல்பாடு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. 2015 பாரிஸில் நடைபெற்ற ​COP –​ ​21 ​​பேச்சுவார்த்தையில்,​​​​​​ இந்தியா ​முன்னனியில் இருந்ததை எண்ணி​​​ நான் பெருமிதம் கொள்கிறேன். அதீத வளம் மிக்க சூரிய ​​சக்தியை கையாளவும் மற்றும் சூரிய சக்தியால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் நாடுகளுடன் கைகோர்த்து இதை நெறிப்படுத்தவும் 2018 மார்ச் மாதத்தில் பல்வேறு நாட்டை சேர்ந்த உலகத் தலைவர்கள், “​​சர்வதேச சூரியசக்தி ஒப்பந்தத்தை”​​ துவங்க​ டெல்லியில் ஒருங்கிணைந்தனர்.

கால மாற்றத்தை குறித்து உலகம் பேசி வரும் வேளையில் இந்த சூழலுக்கு நிகழ ​​வேண்டிய நீதிக்குறித்தும் சேர்த்தே பேசும் எதிரொலிகள் இந்தியாவிலிருந்து எழுகின்றன. காலத்திற்கான நீதி என்பது, கால மாற்றத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏழை மக்களின் விருப்பங்களை உரிமைகளை பாதுகாப்பது.நான் முன்னரே எழுதியிருப்பதை போல,​​ நம்முடைய இன்றைய செயல்கள் மனித நாகரீகத்தின் மீது நம் காலத்தை தாண்டியும் நிலைத்து நிற்க ​​போகிறது. நிலையான வருங்காலத்திற்காக உலகளாவிய பொறுப்பை தூக்கி சுமக்கப்​​ போ​​​கிறோமா​​​​​இல்லையா ​​என்பது நம்மை பொறுத்தது. அரசு விதிமுறைகளால் அல்லாமல் சுற்றுச்சூ​​ழல் குறித்த உள்ளுணர்வால் இந்த மாற்றம் நிகழந்து சுற்றுச்சு​​ழல் தத்துவத்திற்கே இது ஓர் முன்ணுதாரணமாக திகழ வேண்டும். இந்த பாதை நோக்கி பெரும் சிரத்தையுடன் பணிபுரியும் ஒவ்வொறு தனி மனிதரையும் ஒவ்வொறு நிறுவனத்தையும் இத்தருணத்தில் வாழ்த்துகிறேன். எந்நாளும் நினைவுக்கூறத்தக்க சமூகத்தின் மாபெரும் மாற்றத்திற்கு பெரும் முன்னோடியாக இவர்கள் திகழ்கிறார்கள். அவர்கள் இவ்வழியில் தொடர்ந்து இயங்க அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமென உறுதியளிக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்;​​ அது மனிதகுல மேம்பாட்டிற்கான ஓர் மைல்கல் சாதனையாக அமையும்.