அயோத்தி ராமர் கோவிலின் ஒவ்வொரு கல்லிலும் பா.ஜ.க-வின் வியர்வை!

இந்துக்களின் நூற்றாண்டு கால ஏக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா இனிதே அரங்கேறியது. பிரதமர் மோடி ராமரின் வஸ்திரங்கள் எடுத்து வந்து சடங்குகளை ஆரம்பித்து வைக்க, வேத மந்திரங்கள் முழங்க பால ராமரின் கண்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உலகம் முழுவதும் உள்ள இந்து பக்தர்கள் இதனை கொண்டாடி வரும் வேளையில், பா.ஜ.க-வினர் உற்சாக பெருக்குடன் காணப்படுகின்றனர். இந்தியாவில் மற்ற எல்லா கட்சிகளையும் தாண்டி, ராமர் கோயில் உருவாக பா.ஜ.க செய்த […]

இந்துக்களின் நூற்றாண்டு கால ஏக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா இனிதே அரங்கேறியது. பிரதமர் மோடி ராமரின் வஸ்திரங்கள் எடுத்து வந்து சடங்குகளை ஆரம்பித்து வைக்க, வேத மந்திரங்கள் முழங்க பால ராமரின் கண்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உலகம் முழுவதும் உள்ள இந்து பக்தர்கள் இதனை கொண்டாடி வரும் வேளையில், பா.ஜ.க-வினர் உற்சாக பெருக்குடன் காணப்படுகின்றனர். இந்தியாவில் மற்ற எல்லா கட்சிகளையும் தாண்டி, ராமர் கோயில் உருவாக பா.ஜ.க செய்த தியாகங்கள் அளவில்லாதது. அதனால் தான் ராமர் கோயில் வெற்றியை பா.ஜ.க-வினர் உணர்வுப்பூர்வமாக அணுகுவதை காண முடிகிறது. கிட்டத்தட்ட நான்கு மாநிலத்தில் ஆட்சியை இழந்து, தொண்டர்களின் உயிரை பறிகொடுத்து, சிறுபான்மை ஓட்டு வங்கியை இழந்து பல எதிர்ப்பை மீறி ராமர் கோவிலை சாதித்த ஒரே காட்சி பா.ஜ.க மட்டுமே. ராமர் கோயில் வெற்றியை கொண்டாட முழு தகுதி பா.ஜ.க-விற்கு இருக்கிறது. இதன் வீரியம் புரிய வேண்டும் என்றால் இன்றல்ல, நேற்றல்ல பல நூற்றாண்டு வரலாறை புரட்டி பார்க்க வேண்டும்.  

பாபர் தொடங்கி வைத்தது 

1500-களில் வட இந்தியா முழுவதும் உள்ள கோயில்களை முகலாய அரசர் பாபர் தாக்கி அழித்தார். அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்பட்டு அதன் மீது மசூதி கட்டப்பட்டது. அப்போது தொடங்கி அங்கே மீண்டும் கோயில் கட்டப்பட வேண்டும் என இந்துக்கள் போராடி வந்தனர். 1853-ல் முதல் முறையாக வன்முறை வெடித்தது. 1858-ல் மசூதிக்கு வெளியே இந்துக்கள் பூஜை நடத்துவதை பிரிட்டிஷ் நிர்வாகம் தடை செய்தது. மசூதி அருகில் சடங்குகள் நடத்த ஒரு மேடை உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1934-ல் மீண்டும் பதற்றம் நிலவியதால் மசூதி மூடப்பட்டது. 1949-ல் மசூதிக்குள் ராமர் மற்றும் சீதையின் சிலை வைக்கப்பட்டது. 1980 வரை அயோத்தி விவகாரத்தில் எந்த அரசும் தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல் திணறியது. 1986-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கினார். ராமர் கோயில் சர்ச்சைகக்கு இது நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர்ந்த பா.ஜ.க 1990-களில் எடுத்த முன்னெடுப்பே இன்றைய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 

பா.ஜ.க செய்த தியாகங்கள் 

பாரதிய ஜனதாவை தவிர, வேறு எந்த அரசியல் கட்சியும் தங்கள் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு ராமர் கோயில் கட்ட முன்வரவில்லை.  1990-ல் சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை எல்.கே.அத்வானி தலைமையில் அயோத்தி ராமர் ரத யாத்திரை தொடங்கப்பட்டது. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அப்போது ரதத்தின் தேரோட்டியாக இருந்தார். ராமர் கோயில் கட்டுவதற்கான முதல் பெரிய அரசியல் இயக்கம் இதுதான். அத்வானியின் இந்த ரத யாத்திரை ராமர் கோயில் கட்டுவதில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

1990 அக்டோபர் 30-ல் உத்திர பிரதேசத்தின் அப்போதைய முலாயம் சிங் யாதவ் அரசாங்கம் அத்வானியின் கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது. இதன் விளைவாக கோத்தாரி சகோதரர்கள் உட்பட பல கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் கொந்தளிக்க வைத்தது. 1992 டிசம்பர் 6-ல் வி.எச்.பி மற்றும் பாரதிய ஜனதா கட்சி 1,50,000 தொண்டர்களை உள்ளடக்கிய ஒரு பேரணியை ஏற்பாடு செய்தன. பேரணியில் எதிர்தரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் வன்முறையாக மாறியது. இதனால் வெகுண்டு எழுந்த கூட்டம் மசூதியை இடித்தது. 

4 மாநிலங்களில் ஆட்சியை இழந்த பா.ஜ.க 

1992 டிசம்பர் 6-க்கு முன் 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி இருந்தது. அதற்கு இரண்டு வாரத்துக்கு பின் 4 மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சி பறிபோனது. உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங்கின் பி.ஜே.பி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ராஜஸ்தானில் பைரோன் சிங் ஷெகாவத் தலைமையிலான அரசும், மத்திய பிரதேசத்தில சுந்தர்லால் பட்வா தலைமையிலான அரசும் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் சாந்த குமார் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது. இத்தனை நடந்தும் பா.ஜ.க ராமர் கோயில் விவகாரத்தில் தனது போக்கை மாற்றவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மற்ற கட்சிகள் இஸ்லாமிய வாக்குகளை குறி வைத்து பா.ஜ.க-வுக்கு எதிராக திரும்பின. பா.ஜ.க-வை ஒதுக்கும் யுக்தியை கையாண்டன. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், 1992 சம்பவத்துக்கு பிறகு 1996-ல் பாஜக தனித்து 161 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால் 1989-ல் வி.பி. சிங் தலைமையிலான ஜனதா தளம் 143 இடங்களுடன் ஆட்சி அமைக்க முடிந்தது. 2004-ல் காங்கிரஸ் 145 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சி அமைத்தது. இதற்கு காரணம் அப்போது எந்த கட்சியும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்காததே ஆகும். சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற கவலை தான் எல்லாமே. 

2002ல் நடந்த பெரும் துயரம் 

2002ல் குஜராத் மாநிலம் கோத்ராவில் கரசேவகர்க வந்த ரயில் கொளுத்தப்பட்டது. அயோத்திவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 59 இந்து பயணிகள் இந்த சம்பவத்தில் இறந்தனர். குஜராத் காவல்படையின் சிறப்பு புலனாய்வு குழுவால், இஸ்லாமிய குழுவொன்று 140 லிட்டர் பெட்ரோலை சம்பவம் நடந்த நாளுக்கு முன் பதுக்கியதும், “கரசேவகர்களை” கொல்ல சதி திட்டம் தீட்டியதையும் கண்டுபிடித்தது. 

கொள்கையின் பிடி நின்ற பா.ஜ.க 

கோத்ரா சம்பவத்துக்கு பின் பாஜகவின் வேகம் பல மடங்கு அதிகரித்தது. 2005-ல் அயோத்தியில் பாபர் மசூதி அழிக்கப்பட்ட இடத்தில் இருந்த தற்காலிக ராமர் கோயிலை ஐந்து பயங்கரவாதிகள் தாக்கினர். பதற்றத்தை தாண்டி ராமர் கோயில் கட்டுவதற்கான வழக்கை பா.ஜ.க எதிர்கொண்டது. 1978 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை நடத்திய இரண்டு தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் அந்த இடத்தில் இந்துக் கோயிலின் எச்சங்கள் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தது. 2019-ல் சர்ச்சைக்குரிய நிலம் ராமர் கோயில் கட்டுவதற்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு ஒப்படைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகே ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர். 

எதிர்ப்புகளை தாண்டி சாதிக்கும் பா.ஜ.க 

2014 தேர்தலின் போது மூன்று பெரிய கருத்தியல் கோரிக்கைகளை முன்னிறுத்தியது. அயோத்தியில் ராமர் கோயில், 370-வது சட்டப்பிரிவு நீக்கம், பொது சிவில் சட்டம் ஆகியவை அடங்கும். இந்த மூன்று சித்தாந்த பிரச்சினைகளால் தான், இன்றும் கூட்டணி கட்சிகளை ஈர்ப்பது பா.ஜ.க-வுக்கு கடினமாக உள்ளது. 2024-ல் எப்படியாவது பாஜகவுக்கு 272 இடங்கள் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் வியூகம். 1986-ல் இருந்தே இதே போக்கு நீடிக்கிறது. அப்போது பாபர் மசூதியில் இந்துக்கள் வழிபட ராஜீவ் காந்தி அனுமதி கொடுத்தார். ஆனால் அதற்கு முன் 40 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அந்த சிக்கலுக்கு தீர்வு காண தவறிவிட்டது. இஸ்லாமியர்களை திருப்திபடுத்தும் முயற்சியை மட்டுமே இன்றளவும் மற்ற கட்சிகள் செய்கிறன. 

உதாரணமாக வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை 1991-ல் நிறைவேற்றினார்கள். இது காசி மற்றும் மதுராவில் இந்துகளின் வழிபாட்டு உரிமைக்கு பாதகமாக உள்ளது. பின்னர் 1995-ல் வக்ஃப் சட்டம் வந்தது. இது முஸ்லிம் மத நோக்கங்களுக்காக இந்தியாவில் எங்கும் எந்த நிலத்தையும் கையகப்படுத்த வக்ஃப் வாரியங்களுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியது. அதுவும் வக்ஃப் தீர்ப்பாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. வக்ஃப் தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளை ரத்து செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் இருக்குமா என்பது கூட தெளிவாகத் தெரியவில்லை. 2007-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ராமர் சேதுவை இடிக்க விரும்பிய அவசரத்தை யாரால் மறக்க முடியும்? இதற்கு எதிராக பா.ஜ.க தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இன்றளவும் மக்களுக்கு கொடுத்த வாக்கை கொள்கை பிடிப்போடு பா.ஜ.க கடைபிடித்து வருகிறது. 2014-க்கு பிறகு இந்தியா அதிவேக நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலையங்கள் கட்டமைப்பு என பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. மக்களுக்கு கழிப்பறைகள், குழாய் நீர், எரிவாயு இணைப்புகள், மின் இணைப்புகள், வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அடித்தட்டு மக்கள் வரை சென்றடைகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தைப் பிடிக்கும். இந்தியா மாபெரும் வல்லரசாக மாறும் என உலகமே காத்திருக்கிறது. ஸ்ரீ ராமர் அயோத்திக்கு திரும்புவது பல வழிகளில் அடையாளமாக உள்ளது. ஜெய் ஶ்ரீராம்.

Dr. SG Suryah

Dr. SG Suryah

Writer, Columnist & Author

More about him

Make A Comment

Keep reading

The Day Congress Agreed to Gift Assam to Pakistan

Yesterday, as I watched Prime Minister Narendra Modi speak in Guwahati, I felt a strange mix of emotions—vindication,…

கைதும் – ஒரு வருடமும் – தி.மு.க-வின் நயவஞ்சக அரசியலால் கைது செய்யப்பட்டது ஏன்?

ஜூன் 16, 2023 சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு இதே நாள் இரவு தமிழக காவல்த்துறை அத்துமீறி என் வீடு புகுந்து கைது செய்து,இரவோடு…
SG Suryah in RSS Pathasanchalan

சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பு!

ஆர்.எஸ்.எஸ் பேரியக்கம் இந்திய சுதந்திரத்திற்கு அளப்பரிய பங்காற்றி இருந்தாலும், சுதந்திர போராட்டத்தின் போது மாபெரும் சக்தியாக விளங்கிய போதிலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சுதந்திர போராட்ட…
Close

Bold. Relentless. For the People.

UP