வந்தார்! வென்றார்! – திவாலில் இருந்து இந்திய பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுத்த பிரதமர் மோடி!

தினமலர் நாளிதழில் 18.11.2023 அன்று “வந்தார், வென்றார் மோடி!” என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இங்கே மறுபதிப்பு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் வங்கிகள் திவால் ஆன போது, இந்திய வங்கிகளும் திவாலாகி விடும் என்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கூறின. ஆனால் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் லாபம் இந்த நிதியாண்டில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை நாங்கள் உயர்த்திக் கொண்டு வருகிறோம் என பிரதமர் மோடி கூறி உள்ளார். அம்பானிகளுக்கும், […]

தினமலர் நாளிதழில் 18.11.2023 அன்று “வந்தார், வென்றார் மோடி!” என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இங்கே மறுபதிப்பு செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் வங்கிகள் திவால் ஆன போது, இந்திய வங்கிகளும் திவாலாகி விடும் என்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கூறின. ஆனால் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் லாபம் இந்த நிதியாண்டில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை நாங்கள் உயர்த்திக் கொண்டு வருகிறோம் என பிரதமர் மோடி கூறி உள்ளார். அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் கடன் கொடுத்து இந்திய வங்கிகளை பிரதமர் மோடி அரசு திவால் நிலைக்கு தள்ளி விட்டதாக அரைகுறை அறிவுள்ள காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சொல்கின்றன. 2014-ல் மோசமான நிலையில் இருந்த பொதுத்துறை வங்கிகளின் நிலை 2023-ல் எப்படி மாறியுள்ளது என்பதை ஒப்பிட்டு பார்த்தாலே, அவர்கள் சொல்லும் பொய்யுரைகள் வெட்ட வெளிச்சமாகும். மோடி அரசு மீது காங்கிரஸ் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எப்படி தவிடு பொடியாகிறது என்பதை வாங்கிகளின் 9 ஆண்டுகால செயல்பாடுகளை வைத்து பார்ப்போம். 

2014–க்கு முன் வங்கிகளின் நிலை

2013 – 2014-ல் பொதுத்துறை வங்கிகளின் லாபம் 27 சதவிகிதம் சரிந்து இருந்தது. 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு, NPA எனப்படும் வாரா கடன்களின் உண்மையான அளவை அறிய விசாரணை தொடங்கியது. இதன் மூலம் சொத்து தர மதிப்பாய்வு (AQR) என்ற புள்ளி கணக்கிடப்பட்டது. வங்கிகளை பொறுத்தவரை 3 – 5 சதவிகிதத்துக்கும் அதிகமான வாரா கடன்கள்(NPA) இருப்பது மிக மோசமான நிலையை குறிக்கும். அப்போது கனரா வங்கிக்கு 12%, மகாராஷ்டிரா வங்கிக்கு 19%, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 18%. IDBI, IOB 24-28% என்ற அளவில் வாரா கடன்கள் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலான SBI வங்கிக்கு 11% வாரா கடன்கள் இருந்தது. ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாரா கடன் அளவு 3 – 5% என்ற அபாய அளவை விட பல மடங்கு அதிகமாக 15% என்ற அளவில் இருந்தது. இது தான் 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் விட்டுச் சென்ற நிலை. 

மோடி அரசு எடுத்த அஸ்திரங்கள் 

முதலில் வங்கிகளின் அனைத்து விவரங்களும் திரட்டப்பட்டு பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மோசமான நிலையில் இருந்த வங்கிகளை மீட்டெடுக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டது. முதல் கட்டமாக பொதுத்துறை வங்கிகளில் புதிய பணம் போடப்பட்டது. ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் அரசு முதலீடு செய்தது. இது வங்கிகளின் நிலையை உயர்த்தியது. பெரும்பாலான பணம் அரசு பத்திரங்கள் மூலமாக முதலீடு செய்யப்பட்டது. இந்த செயல்முறையை 2022 வரை மத்திய அரசு தொடர்ந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 2023-ல் பொதுதுறை வங்கிகள் முழு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது. 

இரண்டாவது முன்னெடுப்பாக மிக மோசமான நிலையில் இருந்த சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் வங்கிகளின் செயல்திறன் மேம்பட்டது. இதிலும் சில ஆபத்துகள் இருந்தது. மோசமான நிலையில் இருந்த சிறு வங்கிகளின் தாக்கம் பெரிய வங்கிகளை பாதிக்காத வகையில் வங்கி இணைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

மூன்றாவதாக, வாரா கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டது. இனி யாரும் பழைய கடனை அடைக்காமல் புதிய கடன் வாங்க முடியாது, வேண்டுமென்றே கடனை செலுத்தாதவர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் கிடைக்காது, பங்குச் சந்தைகளில் இருந்து பணம் திரட்டக் கூட அவர்களுக்கு அனுமதி இல்லை என மோடி ஆட்சியில் சட்டங்கள் மிக்கடுமையாக்கப்பட்டன. இதனால் 2014-ல் இருந்து இதுவரை 10 லட்சம் கோடிக்கு மேலான வாராகடன்கள் மீட்கப்பட்டுள்ளது.

நான்காவதாக, 21 பொதுத்துறை வங்கிகளில், நெருக்கடியை எதிர்கொண்ட 11 வங்கிகள், சிறப்பு உடனடி திருத்த நடவடிக்கை (பிசிஏ) கட்டமைப்பின் கீழ் வைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அவைகளின் வாரா கடன் விவரம் உட்பட அனைத்தும் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, அவற்றை மீட்க ரிசர்வ் வங்கி சில அறிவுரைகளை வழங்கியது. 2022-ல் நெருக்கடியால் பட்டியலிடப்பட்ட 11 வங்கிகளும் பழைய நிலைக்கு திரும்பின. இப்போது பல மடங்கு லாபம் ஈட்டும் நிலையை அடைந்து விட்டன.

2014–க்கு பிறகு நடந்த மாற்றங்கள் 

வங்கி கட்டமைப்பில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் மெல்ல மெல்ல வங்கிகள் லாபத்தை நோக்கி நகர ஆரம்பித்தன. பொதுத்துறை வங்கிகளின் லாபம் கடந்த நிதியாண்டில் ₹1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. முந்தைய 2021 -2022-ஆம் நிதியாண்டில் இந்த 12 பொதுத் துறை வங்கிகளின் லாபம் ₹66,539.98 கோடியாக மட்டுமே இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது 2023-ல் வங்கிகளின் லாபம் 57 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

வங்கிகளின் மொத்த லாபம் ₹1,04,649 கோடி. ஒட்டுமொத்த லாபத்தில் SBI வங்கியின் பங்களிப்பு மட்டும் ₹50,232 கோடியாகும். இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 59 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் பேங்க் ஆப் மகாராஷ்டிரா ₹2,602 கோடி, யூகோ வங்கி ₹1,862 கோடி, பேங்க் ஆப் பரோடா ₹14,110 கோடி, இந்தியன் வங்கி ₹5,282 கோடி, ஐஓபி ₹2,099 கோடி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ₹8,433 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

2017 – 2018-ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ₹85,390 கோடி அளவுக்கு நிகர இழப்பை சந்தித்திருந்தன. 2019-ல் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, வங்கி கட்டமைப்பில் பல துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவால் மூன்றே வருடங்களில் வங்கிகள் ₹1 லட்சம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் நிலைக்கு உயர்ந்துள்ளன. அதுவும் SBI வங்கியின் லாபம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபத்தை விட அதிகமாக பதிவு செய்துள்ளது.

மோடி அரசின் சாதுர்யம்

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே வங்கிகள் அடிக்கடி திவால் ஆகிறது. சமீபத்தில் இரண்டு வங்கிகள் திவால் ஆனது. ஆனால் இந்திய வங்கிகளின் நிலை அப்படி இல்லை. அமெரிக்காவை போல இந்திய வங்கிகளுக்கு எந்த ஒரு சூழலிலும், இதுவரை திவால் நிலை வந்தது இல்லை. எந்த ஒரு வங்கி நிதி சூழலில் சிக்கித் தடுமாறினாலும், அதை அரசு கை தூக்கி விடுகிறது. அத்துடன், SBI உட்பட நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கிகள், சிறிய வங்கிகளில் முதலீடு செய்து, அவற்றை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அரசால் கேட்கப்படுகிறது. மக்கள் நம்பிக்கையை வங்கிகள் இழக்காமல் வைத்திருப்பது ரிசர்வ் வங்கியின் செயல்பாடு முக்கிய காரணம். உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் சிறப்பாக செயல்படும் அமைப்புகளில் ஒன்றாக ரிசர்வ் வங்கி கருதப்படுகிறது.

மாற்று பணமாகும் இந்திய ரூபாய் 

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக சில அரைகுறை பொருளாதார விமர்சகர்கள் செல்கின்றனர். உண்மையில் மற்ற நாடுகளின் கரன்சிகளை ஒப்பிடும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்தில் செல்லாமல் தடுக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. ஐரோப்பாவின் யூரோ டாலருக்கு நிகராக எவ்வளவு வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை பார்த்தால் புரியும். உலகம் நாடுகள் தங்கள் வர்த்தகத்தை அமெரிக்க டாலரில்தான் நடத்த வேண்டி இருக்கிறது. அதை முறியடித்து இந்தியா மெல்ல ரூபாயை புகுத்தி வருகிறது. பல நாடுகளுடன், டாலரில் அல்லாமல் ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்யும் திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மன், ரஷ்யா, ஈரான், சவுதி உட்பட 18 நாடுகள் இந்திய ரூபாயை பரிவர்த்தனை மதிப்பாக ஏற்றுக் கொள்ள தொடங்கியுள்ளது. இதனால் டாலரின் ஆதிக்கம் குறையும். இந்திய ரூபாயின் மதிப்பு வளர்ச்சி அடையும். வலுவான வங்கித்துறையை நோக்கி பயணிக்கிறோம். இதை சாத்தியப்படுத்திய  பிரதமர் மோடியிலான மத்திய அரசுக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி செல்ல கடமை பட்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம்.

Dr. SG Suryah

Dr. SG Suryah

Writer, Columnist & Author

More about him

Make A Comment

Keep reading

The Day Congress Agreed to Gift Assam to Pakistan

Yesterday, as I watched Prime Minister Narendra Modi speak in Guwahati, I felt a strange mix of emotions—vindication,…

கைதும் – ஒரு வருடமும் – தி.மு.க-வின் நயவஞ்சக அரசியலால் கைது செய்யப்பட்டது ஏன்?

ஜூன் 16, 2023 சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு இதே நாள் இரவு தமிழக காவல்த்துறை அத்துமீறி என் வீடு புகுந்து கைது செய்து,இரவோடு…

அயோத்தி ராமர் கோவிலின் ஒவ்வொரு கல்லிலும் பா.ஜ.க-வின் வியர்வை!

இந்துக்களின் நூற்றாண்டு கால ஏக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா இனிதே அரங்கேறியது. பிரதமர் மோடி ராமரின் வஸ்திரங்கள் எடுத்து…
Close

Bold. Relentless. For the People.

UP